மூதூரில் டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; இரு இளைஞர்கள் பலி !


மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஜின்னாநகர் 59 ஆம் கட்டை பகுதியில் டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் நேற்று(2) ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மூதூர் -கிளிவெட்டி கிராமத்தைச் சேர்ந்த பொறியியல் பீட முதலாம் வருட மாணவனான தமிழ்ச்செல்வன் தனேஸ் (வயது 22), வெளிநாட்டில் இருந்து வருகை தந்த அருணவன் செல்வரெத்தினம் (வயது 19) ஆகிய உறவினர்களான இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.

ரிப்பர் வாகனச் சாரதி மூதூர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். உயிரிழந்த இரண்டு இளைஞர்களின் சடலங்களும் மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.