
2008 ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கிலிருந்து முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவை நீக்குவதற்கு சட்டமா அதிபர் எடுத்த தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனுவின் விசாரணையை, அடுத்த ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் நேற்று (26) திங்கட்கிழமை திகதி நிர்ணயித்துள்ளது.
மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில், கடற்படை அதிகாரிகள் சிலருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிலிருந்து வசந்த கரன்னாகொடவை நீக்குவதற்கு சட்டமா அதிபர் எடுத்த தீர்மானத்துக்கு எதிராக இந்த மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த மனு தொடர்பான விசாரணையைத் தொடர்வதற்காகவே உயர் நீதிமன்றம் 2027ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் திகதியை நிர்ணயித்துள்ளது.








.jpg)



