தெஹிவளையில் 200 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரு பெண்கள் உட்பட நால்வர் கைது – பொலிஸார் தீவிர விசாரணை!



தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காலி வீதிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது வெவ்வேறு அளவுகளில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 100 கிராம், 50 கிராம் ,30 கிராம் மற்றும் 20 கிராம் என வெவ்வேறு அளவுகளில் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட ஆண்களின் வயது 24 மற்றும் 29 ஆவதுடன், அவர்கள் பேலியகொட மற்றும் கொழும்பு 12 பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

கைது செய்யப்பட்ட பெண் சந்தேக நபர்கள் 22 மற்றும் 25 வயதுடையவர்கள் என்பதுடன், அவர்கள் மொனராகலை மற்றும் சிலாபம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

தெஹிவளை பொலிஸார் இவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.