
2025 ஆம் ஆண்டிற்கான 'மிஸ் இன்டர்நேஷனல் வேர்ல்ட்' (Miss International World) அழகிப் பட்டத்தைச் சூடிய கட்டலினா டுவுக் (Catalina Duque), விசேட விஜயமொன்றை மேற்கொண்டு இன்று வெள்ளிக்கிழமை (23) அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளார்.
2026 ஆம் ஆண்டிற்கான 'மிஸ் இன்டர்நேஷனல் வேர்ல்ட்' அழகிப் போட்டித் தொடரின் பிரம்மாண்ட இறுதிப் போட்டியில் பிரதம விருந்தினராகக் கலந்துகொள்வதற்காகவே அவர் நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.
கத்தார் விமான சேவைக்குச் சொந்தமான QR 662 இலக்க விமானம் மூலமாக தோஹாவிலிருந்து பயணித்த அவர், இன்று அதிகாலை 1.55 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
இலங்கையை வந்தடைந்த அவரை, மிஸ் இன்டர்நேஷனல் வேர்ல்ட் போட்டியின் இலங்கைக்கான தேசிய அமைப்பாளர் திருமதி. ரஜிதா லொக்குபண்டார மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் உயர் அதிகாரிகள் குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொன்னாடை போர்த்தி, மலர்க்கொத்து வழங்கி அமோகமாக வரவேற்றனர்.











.jpg)
