இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2026இல் 4 சதவீதமாக இருக்கும் – 2027இல் 3.7 சதவீதமாகக் குறையும் என சர்வதேச நாணய நிதியம் கணிப்பு!



இலங்கையின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்திப் (GDP) வளர்ச்சியானது 2026 ஆம் ஆண்டில் 4% ஐ எட்டும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியம் வௌியிட்டுள்ள சமீபத்திய உலகப் பொருளாதார கண்ணோட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் 2027 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 3.7% ஆகக் குறையும் என்றும் சர்வதேச நாணய நிதியம் எதிர்வுகூறியுள்ளது.

கடந்த 2025 ஆம் ஆண்டில் 5 சதவீதமாக காணப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியானது, அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருவதை சர்வதேச நாணய நிதியம் வௌியிட்டுள்ள உலகப் பொருளாதார கண்ணோட்ட அறிக்கையில் வௌிப்படுத்தப்பட்டுள்ளது.