
பமுனுகம பொலிஸ் பிரிவின் பமுனுகம பகுதியில் அதிரடி சோதனை நடத்தியதில் கசிப்பு தயாரிக்கப் பயன்படும் 2079 லிற்றர் கோடா (11 பேரல்கள்) மற்றும் 02 செப்புச் சுருள்களுடன் பெருமளவிலான பொருட்கள் நேற்று மாலை திங்கட்கிழமை (12) கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பமுனுகம பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் அதிகாரி குழுவினரிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலிற்கு அமைவாக , புமுனுகம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கையின் போதே பெருமளவிலான பொருட்கள் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
எனினும், திடீர் சோதனையின் போது குறித்த சந்தேக நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தப்பியோடிய சந்தேக நபரைை விரைவில் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளில் பமுனுகம பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.












