ஹெரோயின் மற்றும் துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கொஸ்கொட பகுதியில் ஒருவர் நேற்று (11) கைது செய்யப்பட்டுள்ளார்.
3 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள், மைக்ரோ ரக துப்பாக்கி ஒன்று மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் இரண்டு தோட்டாக்கள் என்பன சந்தேகநபரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்று (11) கொஸ்கொட, பெலேகஸ்பலாத்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கொஸ்கொட, பெலேகஸ்பலாத்த பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபராவார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பிலான மேலதிக சட்ட நடவடிக்கைகளை கொஸ்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.