மாத்தளை யட்டவத்தையில் பொலிஸார் மீது கும்பல் தாக்குதல் – 3 அதிகாரிகள் காயம்; 4 சந்தேகநபர்கள் கைது!




மாத்தளை, யட்டவத்த பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 3 பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யட்டவத்த பகுதியில் ஒரு கும்பலால் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் பொலிஸாரின் முச்சக்கரவண்டியும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய 4 சந்தேக நபர்களை யட்டவத்த பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.