
மாவனெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிகல சந்தை பகுதியில் கேகாலை குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது, துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேகாலை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், 22 ஆம் திகதி மாவனெல்ல, கிரிகல சந்தை பகுதியில் இச்சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து 02 கை துப்பாக்கிகள் , 05 தோட்டாக்கள் , 156 ஈயக் குண்டுகள் மற்றும் 12 போர ரக துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 20 வெடிமருந்து தோட்டாக்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர் முருத்தவல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபராவார்.
மேலும், சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக 72 மணிநேர தடுப்புகாவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன், மாவனெல்ல பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.








.jpg)



