
தேசிய நாமல் உயன பூங்காவின் 36ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில், பிரதமர் ஹரிணி அமர சூரிய தலைமையில் 1,500 பாடசாலை மாணவர்களுக்குக் கல்விப் பொருட்கள் வழங்கும் விழா தேசிய நாமல் உயனவில் நடைபெற்றது.
அநுராதபுரம் மாவட்டத்தின் கெக்கிராவ நகருக்கு அண்மையில் உள்ள தெற்காசியாவிலேயே புகழ் பெற்ற ரோச திருவான கல் மலைகள் நிறைந்த தேசிய நாமல் உயன பூங்காவில் சனிக்கிழமை (10) மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இக்கல்விப் பொருட்கள் தென் கொரியாவின் அமைப்பொன்றினால் நன்கொடையாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
36 ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் முக்கியமாக மரம் நடும் விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தேசிய நமால் பூங்காவைப் பாதுகாப்பதற்காகத் தங்களை அர்ப்பணித்த பத்திரிகையாளர்கள், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மக்களையும் இந்த நிகழ்வின் போது நினைவுகூரப்பட்டதுடன் தேசிய நமால் பூங்காவிற்கும் கொரியாவிற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது ஒரு சிறப்பு அம்சமாக அமைந்தது.
இந் நிகழ்வில் தேசிய நாமல் உயன பூங்காவின் ஏற்பாட்டாளர்,வன வாசி ராஹுல தேரர் ,கொரிய நாட்டு பிரதிநிதிகள் அமைச்சர்களான நளிந்த ஜயதிஸ்ஸ,வசந்த சமரசிங்க மற்றும் அநுராதபுரம் மாவட்ட அரசாங்க அதிபர் ரஞ்சித் விமலசூரிய உள்ளிட்ட உயர் அரச அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.












