
ஜா-எல பகுதியில் பேலியகொடை கோட்ட குற்றத்தடுப்புப் பணியக அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனையின் போது, 4.5 கிலோகிராமிற்கும் அதிகமான 'ஐஸ்' போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து போதைப்பொருட்களை அளவீடு செய்யவும் பொதி செய்யவும் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் இலத்திரனியல் தராசு ஒன்றும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இயங்கும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்களால் நாட்டுக்கு அனுப்பிவைக்கப்படும் போதைப்பொருட்களை விநியோகிக்கும் வலையமைப்பில் இந்தச் சந்தேகநபர் நேரடியாக ஈடுபட்டுவந்துள்ளதாகப் புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
மொத்தமாகப் பெறப்படும் போதைப்பொருட்களைச் சிறிய அளவுகளாகப் பிரித்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள நபர்களுக்கு இவர் விற்பனை செய்துவந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பில் தொடர்புடைய ஏனைய நபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்காகப் பேலியகொடை கோட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.












