பலாங்கொடையில் பின்னோக்கிச் சென்ற தனியார் பேருந்து மோட்டார் சைக்கிளுடன் மோதல் – 48 வயது நபர் உயிரிழப்பு; சாரதி கைது!



பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இம்புலமுர - பலாங்கொடை வீதியின் கிரிமினகோட பகுதியில் ஒரு தனியார் பேருந்து, எதிர்த்திசையில் இருந்து வந்த பேருந்துக்கு வழிவிடுவதற்காக பின்னோக்கிச் சென்றபோது இருசக்கர வாகனத்தில் மோதியதில் அவ்வாகனத்தின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை (9) காலை இடம்பெற்ற இவ்விபத்தில் உயிரிழந்தவர் பலாங்கொடை, மஹவலதென்ன பிரதேசத்தில் வசிக்கும் 48 வயதுடையவர் என பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவ்விபத்தின்போது பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளில் பலாங்கொடை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.