
கலா ஓயா ஆற்றின் மேல் மற்றும் நடு நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையினால், அப் பிரதேசத்திலுள்ள தாழ்நிலப் பகுதிகளுக்கு நீர்ப்பாசனத் திணைக்களம் வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
கலா ஓயாவின் நீர்மட்டம் வெள்ள அபாய எல்லையை நெருங்கி வருவதாகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீர்த்தேக்கத்திற்குள் வரும் நீரின் அளவு அதிகரித்து வருவதால், ராஜங்கனை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டு, விநாடிக்கு 13,200 கன அடிக்கும் அதிகமான வேகத்தில் நீராஜங்கனை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு – கலா ஓயாவை அண்மித்த 4 பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!ரும் வெளியேற்றப்பட்டு ஆற்றில் விடப்பட்டு வருகிறது.
நீர்த்தேக்கத்திற்குள் வரும் நீரின் அளவைப் பொறுத்து, நீர் வெளியேற்றும் வீதம் மேலும் அதிகரிக்கப்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கலா ஓயா ஆற்றுப் பள்ளத்தாக்கின் கீழ் மற்றும் அதனை அண்மித்த தாழ்நிலப் பகுதியான ராஜங்கனை, நொச்சியாகம, வனாத்தவில்லு, கருவலகஸ்வெவ ஆகிய பிரதேசச் செயலாளர் பிரிவுகளில் வசிப்பவர்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்:
வெள்ளப்பெருக்கு அபாயம் நிலவுவதால், குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்களும், அப்பகுதியில் பயணம் செய்யும் வாகனச் சாரதிகளும் பயணிகள் அனைவரும் தீவிர விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
தொடரும் சீரற்ற வானிலை மற்றும் அபாயச் சூழலைக் கருத்திற்கொண்டு, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு அனர்த்த முகாமைத்து அதிகாரிகளுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












