கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுகம்பளை – தொலாகத்த வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று காரின் பின்பகுதியில் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று திங்கட்கிழமை (12) காலை இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் தெவலபொல பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.












