வீரகெட்டியவில் துப்பாக்கி மற்றும் 6 தோட்டாக்களுடன் 35 வயதுடைய நபர் கைது


வீரகெட்டிய, கிஞ்சிகுணே பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின்போது, கைத்துப்பாக்கி மற்றும் ஆறு தோட்டாக்களுடன் 35 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைய, வீரகெட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் மெதமுலன, கிஞ்சிகுணே பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வீரகெட்டிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.