மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை கடற்பகுதியில் கடற்படையினர் நேற்று மாலை மேற்கொண்ட திடீர் சோதனையின் போது, சுமார் ஆறரை இலட்சம் ரூபா பெறுமதியான சட்டவிரோத சுருக்கு வலைத் தொகுதி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மீன்பிடி அமைச்சினால் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ள சுருக்கு வலைகளைப் பயன்படுத்தி பாலமுனை கடற்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபடுவதாகக் கடற்படைக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது கைப்பற்றப்பட்ட 165 மீற்றர் நீளமுடைய சட்டவிரோத வலைத் தொகுதி, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடி மற்றும் நீர்வாழ் வளங்கள் திணைக்கள அதிகாரிகளிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த சட்டவிரோத வலைத் தொகுதி எதிர்வரும் நாட்களில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக மாவட்ட மீன்பிடித் திணைக்கள அதிகாரிகள் மேலும் தெரிவித்தன