
நிட்டம்புவை பொலஸ் பிரிவுக்குட்பட்ட தங்கொல்லவத்தை பகுதியில், 70 வயதுடைய வயோதிபர் ஒருவர் தடியால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட வயோதிபருக்கும் அவரது மகளின் கணவரான மருமகனுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாத்தைத் தொடர்ந்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று சனிக்கிழமை (10) மாலையில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் பலத்த காயமடைந்த வயோதிபர், வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் நிட்டம்புவை, தங்கொல்லவத்தை பகுதியைச் சேர்ந்தவர் என நிட்டம்புவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தைத் தொடர்ந்து தலைமறைவான 26 வயதுடைய சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளில் நிட்டம்புவை பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.












