மட்டக்களப்பு முதல் அம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் கடும் கொந்தளிப்பு – மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்!



மட்டக்களப்பிலிருந்து அம்பாந்தோட்டை வரை திருகோணமலை, காங்கேசன்துறை ஊடாகக் கொழும்பு மற்றும் காலி வரையிலான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் கொந்தளிப்பான கடல் தொடர்பில் எச்சரிக்கையை விடுத்துள்ளது

இன்று (22) வியாழக்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை நாளை வெள்ளிக்கிழமை காலை 6.00 மணி வரை அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை, காங்கேசன்துறை, கற்பிட்டி, கொழும்பு மற்றும் காலி ஊடாக மட்டக்களப்பிலிருந்து அம்பாந்தோட்டை வரையிலான கடற்பரப்புகள்.

குறித்த கடல் பிராந்தியங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழையின் போது மணிக்கு 60-70 கிலோ மீற்றர் வேகத்தில் தற்காலிகமான கடும் காற்று வீசக்கூடுவதுடன், கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்

குறித்த கடற் பிராந்தியங்களில் மீன்பிடி மற்றும் கடற்தொழிலில் ஈடுபடும் சமூகத்தினர் அனைவரும் இது குறித்து மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.