நாடு முழுவதும் 75 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அமைக்க நடவடிக்கை – தடையற்ற எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்த ஜனாதிபதி அநுர அறிவிப்பு!



இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக நாடளாவிய ரீதியில் 75 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

2026 இலங்கை பொருளாதார மற்றும் முதலீட்டு மாநாட்டில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் நிறுவனங்கள் எரிபொருள் கையிருப்பில் இருந்தும் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நெருக்கடியான சூழ்நிலைகளில் மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

தனியார் நிறுவனங்களின் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில், அதனை எதிர்கொள்ளவும் மக்களுக்குத் தடையற்ற விநியோகத்தை உறுதிப்படுத்தவும் அரச எரிபொருள் நிரப்பு நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.