
கோவிந்தபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளம்ஓயா பகுதியில் புதையல் தோண்டி எடுக்கும் நோக்கில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்ட 07 சந்தேகநபர்கள் கோவிந்தபுரம் பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவிந்தபுரம் பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், நேற்று புதன்கிழமை (21) பள்ளம்ஓயா பகுதியில் இச்சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 37 முதல் 56 வயதிற்குட்பட்டவர்கள் என்பதுடன், மொணராகலை, இரத்தினபுரி, உஹன மற்றும் படல்கும்புர ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், இச் சம்பவம் தொடர்பில் கோவிந்தபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.












