95 ஒக்டேன் பெற்றோல் விலையை 20 ரூபாவால் அதிகரித்தது ஐ.ஓ.சி.




லங்கா ஐ.ஓ.சி நிறுவனம், 95 ஒக்டேன் பெற்றோலின் விலையை ஞாயிற்றுக்கிழமை (25) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லீற்றருக்கு 20 ரூபாவால் அதிகரித்துள்ளது.

இதன்படி, இதுவரை 475 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் புதிய விலை 495 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதேவேளை சினோபெக் நிறு­வனமும் 95 ஒக்டேன் பெற்றோலின் விலையை ஒரு லீற்றருக்கு 20 ரூபாவால் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.