பொல்கஹவெல – பேராதனை இடையே இன்று முதல் புதிய தினசரி ரயில் சேவை – பாடசாலை மாணவர்கள் மற்றும் பயணிகளுக்கு விசேட வசதி!



பொல்கஹவெல சந்தி மற்றும் பேராதனை இடையே இன்று (12) முதல் புதிய ரயில் சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த டிட்வா சூறாவளிக்கு பின்னர், கடந்த 2ஆம் திகதி முதல் மலையகப் பாதையில் ரம்புக்கனைக்கும் கம்பளைக்கும் இடையிலான ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டு, தற்போது வழமைபோல் இயங்கி வருவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கு இணையாக, பொல்கஹவெல சந்தி - பேராதனை இடையே ரயில் போக்குவரத்து வசதிகளைப் பெற எதிர்பார்க்கும் பாடசாரலை மாணவர்கள் மற்றும் பிற பயணிகளுக்காக இன்று (12) முதல் தினசரி ரயில் சேவையை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.