
தற்போது நிலவும் மழை நிலைமையினால் ஏற்படக்கூடிய அனர்த்த சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள குறைந்த அழுத்தத் தாழ்வு பிரதேசம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்புகளைக் சுட்டிக்காட்டி, அதன் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி வடக்கு, மேல், சப்ரகமுவ, தெற்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இதன்காரணமாக, குறித்த அனைத்துப் பகுதிகளுக்கும் உபகரணங்களும் மீட்புக் குழுக்களும் அனுப்பப்பட்டுள்ளதாக பிரதீப் கொடிப்பிலி சுட்டிக்காட்டியுள்ளார்.








.jpg)



