கொழும்பு துறைமுக நகர முதலீட்டாளர்களிடம் கப்பம் வசூலித்ததாகக் குற்றச்சாட்டு – சீனப் பிரஜை கைது !



கொழும்பு துறைமுக நகரத்தின் முதலீட்டாளர்களிடம் கப்பம் வசூலித்ததாகச் சந்தேகிக்கப்படும் சீன பிரஜை ஒருவர் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சீனாவில் உள்ள குற்றக் கும்பலுடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.