
ஹோமாகம பிரதேச சபையின் தலையீட்டில் தெரு நாய்களின் உடலில் மைக்ரோசிப் செலுத்தி, அந்த விலங்குகள் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தெரு நாய் கடித்தாலோ அல்லது வேறு ஏதேனும் தேவை ஏற்பட்டாலோ, அந்த விலங்குக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதா மற்றும் விலங்கு இருக்கும் இடம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் இந்த முறையின் மூலம் பெற முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது
உரிமையாளர்கள் இல்லாத தெரு நாய்கள் நாட்டின் இன்று பல இடங்களில் காணப்படுவதுடன், காலி சுற்றுலா நகரமும் தற்போது அலைந்து திரியும் நாய்களால் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
இவ்வாறான தெரு நாய்களின் துல்லியமான தரவுகள் மற்றும் புள்ளிவிவரங்களைப் பெறுவது கூட கடினமான ஒரு காரியமாகும்.
இவ்வாறான பின்னணியில், தெரு நாய்களின் உடலில் மைக்ரோசிப் செலுத்தி, அந்த விலங்குகள் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் திட்டமொன்று ஹோமாகம பிரதேச சபையின் தலையீட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தெரு நாய் கடித்தாலோ அல்லது வேறு அவசியமான சந்தர்ப்பத்திலோ, அந்த விலங்குக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதா மற்றும் விலங்கின் நிலைமை உள்ளிட்ட முழுமையான தரவு அறிக்கையைப் பெற முடியும்.
அத்துடன் விலங்கு இருக்கும் இடத்தைக் கண்டறியவும் இதன் மூலம் முடியும்.
இதனிடையே, நீர்வெறுப்பு நோயை ஒழிக்கும் நோக்கில் நாய்களுக்கு தடுப்பூசி போடும் மற்றும் நாய்களைப் பதிவு செய்யும் திட்டமொன்று அண்மையில் ஹட்டன் டிக்கோயா நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.












