கவிதைக்காக இளைஞரிடம் பொலிஸார் விசாரணை நடத்தியதாகப் பரவும் செய்தி பொய்யானது – பொலிஸ் ஊடகப் பிரிவு மறுப்பு !



கவிதை ஒன்று தொடர்பாக தெமட்டகொட பொலிஸாரால் இளைஞர் ஒருவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகளும் காணொளிகளும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

நேற்று வியாழக்கிழமை 22 ஆம் திகதியோ அல்லது அதனை அண்மித்த திகதியோ கவிதை தொடர்பாக தெமட்டகொட பொலிஸ் நிலையத்திற்கு எவ்வித முறைப்பாடும் கிடைக்கப்பெறவில்லை என்றும், அது தொடர்பாக எந்தவொரு நபரிடமும் வாக்குமூலம் பெறப்படவில்லை என்றும் பொலிஸ் நிலைய அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

தெமட்டகொட பொலிஸாரால் நபர் ஒருவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக சட்டத்தரணி சுதத் விக்கிரமரத்ன சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட கருத்து முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என தெரியவந்துள்ளது.

மேலும், இந்த விகாரமான பொய்யான கூற்று தொடர்பாக பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கமைய, மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.