வங்காள விரிகுடாவின் அந்தமான் தீவின் வட பகுதியில் தென்படுகின்ற தாழ் அமுக்கப் பிரதேசம் தீவிரமடைந்து இன்று தாழ் அமுக்கமாக மாற்றமடையும். இது நாளையளவில் மேலும் தீவிரமடைந்து சக்தி மிக்க தாழ் அமுக்கமாக மாறி மேற்கு - வடமேற்குத் திசையை நோக்கி நகர்ந்து செல்லும். இது நாளை மறுதினம் காலையளவில் வங்காள விரிகுடாவின் மேற்குப் பகுதியின் மத்தியில் ஒரு சூறாவளியாக வலுவடையும். தொடர்ந்து வருகின்ற இரண்டு நாட்களில் இந்தியாவின் தமிழ் நாட்டின் ஆந்திரப் பிரதேசத்தின் வட பகுதியுடனும் ஒடிசா கரையின் தென் பகுதியுடனும் ஊடறுத்து செல்லக்கூடும்.
இதனால் இலங்கைக்கு நேரடியான தாக்கம் இல்லை என்றாலும் நாட்டை ஊடறுத்து காற்று வீசுவதுடன் நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் மழைவீழ்ச்சி அதிகரித்தும் காணப்படும்.
சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் வட மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இப் பிராந்தியங்களின் சில இடங்களில் 50 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
கடல் பிராந்தியங்களில்
வங்காள விரிகுடாவில் தாழ் அமுக்கம் உருவாகின்ற படியினால் கடல்சார் ஊழியர்களும் மீனவ சமூகத்தினர்களும் வங்காள விரிகுடாவின் ஆழ் கடல் பிராந்தியங்களுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர். அத்துடன் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற அறிவுறுத்தல்களை கவனத்திற்கொண்டு செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 km வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.
காங்கேசன்துறை தொடக்கம் புத்தளம், கொழும்பு, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.இக் கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 - 60 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.
ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் மணித்தியாலத்திற்கு 60 - 70 km வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

.jpg)