ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு இருதய அறுவை சிகிச்சை – மருத்துவ அறிக்கைகளைச் சமர்ப்பிக்க உத்தரவு!



முன்னாள் முதற் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு, தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவில், அறுவை சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

இது தொடர்பான அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.