பழுகாமம் கண்டுமணிக்கு பழுகாமம் பரம்பரை ஒன்றியத்தால் ஒரு தொகுதி கணணி திரைகள் வழங்கி வைப்பு

(சித்தா)
மட்/பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலய அதிபரின் வேண்டுகோளிற்கு அமைவாக பழுகாமம் பரம்பரை ஒன்றியத்தால்( PAPA) பத்து கணணித்திரைகள் (Computer monotor) இப்பாடசாலைக்கு வழங்கிவைக்கப்பட்டன. லண்டனில் இயங்கி வரும் பழுகாமம் பரம்பரை ஒன்றியத்தின் ஸ்தாபகரும் லண்டன் தாய்ச்சங்கத்தின் தலைவருமான திரு. பெஞ்சமின் பாலா அவர்களிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கு அமைய இவை வழங்கப்பட்டன. இப்பாடசாலையின் மாணவர்களின் கணணி  அறிவை மேம்படுத்தும் நோக்குடன் பழுகாமம் கிளையின் ஊடாக லண்டன் தாய்ச்சங்கம் இதனை வழங்கி வைத்தது. இரண்டு இலட்சத்து ஐம்பத்தொன்பதாயிரத்து ஐந்நூறு ரூபா (259500.00) பெறுமதியான பத்து கணணித்திரைகள் வழங்கி வைக்கப்பட்டது 
இந்நிகழ்வில் பழுகாமம் கிளையின் தலைவர் ஆ.புட்கரன், பொருளாளர் நா.இந்திரநாதன், செயலாளர் ஏ.யுமிதராஜ் ஆகியோரின் பங்கு பற்றலுடன் பாடசாலை அதிபர் நா.ராமேஸ்வரன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. பதில் அதிபராக கடமையாற்றிய கி.கிருஸ்ணராஜன், பிரதி அதிபர்  ராகுலன் அவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர் இப்பிரதேச மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அக்கறையுடன் செயற்படும் பழுகாமம் பரம்பரை ஒன்றியம் (PAPA) பல்வேறு உதவித்திட்டங்களை முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.