எல்ல – வெள்ளவாய பிரதான வீதியில், கரந்தகொல பகுதியில் நேற்று (21) புதன்கிழமை மீட்கப்பட்ட கைக்குண்டை, பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இன்று செயலிழக்கச் செய்து பாதுகாப்பாக அகற்றுவதற்கான நடவடிக்கைகளை விசேட அதிரடிப்படையினர் முன்னெடுக்கவுள்ளனர்.
எல்ல – வெள்ளவாய பிரதான வீதியில், கரந்தகொல பகுதியில் உள்ள வீடொன்றுக்கு நேற்று அதிகாலை இனந்தெரியாத குழுவினர் வருகை தந்து, வீட்டின் கதவைத் தட்டி, தங்களைப் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் என அறிமுகப்படுத்திக் கொண்டு, கதவைத் திறக்குமாறு சத்தமிட்டு கூச்சலிட்டுள்ளனர்.
இதனால் அச்சமடைந்த வீட்டில் இருந்தவர்கள் கதவைத் திறக்காமல் இருந்துள்ளனர். பின்னர், இச்சம்பவம் தொடர்பில் எல்ல பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில், எல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகள் சம்பவம் இடம்பெற்ற வீட்டுக்கு நேரில் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது, வீட்டில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குண்டு ஒன்று காணப்பட்டதைப் பொலிஸார் கண்டறிந்துள்ளனர். குறித்த கைக்குண்டு வெடிக்காத நிலையில் காணப்பட்டதாகவும், குறித்த கைக்குண்டை, அதிகாலை வீட்டுக்கு வருகை தந்து கதவைத் திறக்குமாறு மிரட்டிய இனந்தெரியாத குழுவினர் கைவிட்டுச் சென்றிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.
எனினும், சம்பவம் தொடர்பில் குடும்பத்தினரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பில் எல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.