அம்பாறை - வளத்தாப்பிட்டி பகுதியில் சட்டவிரோத மதுபானங்கள் மீட்பு ; சந்தேகநபர் கைது
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளத்தாப்பிட்டி பகுதியில், சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காகப் பதுக்கிவைக்கப்பட்டிருந்த ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான மதுபானப் போத்தல்களைப் பொலிஸார் மீட்டுள்ளதுடன், சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
இந்தச் சுற்றிவளைப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை (25) மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, 125 பீர் போத்தல்கள் மற்றும் 12 அதிவிசேட சாராயப் போத்தல்கள் கைப்பற்றப்பட்டதுடன், 36 வயதுடைய சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட மதுபானங்களுடன் சந்தேகநபர், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகச் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனரத்னவின் பணிப்புரைக்கு அமைவாகவும், அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவின் பேரிலும், அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சியின் வழிநடத்தலிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசாரின் நெறிப்படுத்தலில், சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் ஆலோசனைக்கு அமைய, ஊழல் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி என். றிபாய்டீன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சம்மாந்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.









.jpg)



