
ஐஸ் போதைப்பொருள் தொகுதியொன்றுடன் சந்தேகநபர் ஒருவர் நுகேகொடை பிராந்திய நச்சு போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
"டிலங்க" என்ற புனைப்பெயரால் அழைக்கப்படும் இந்த சந்தேகநபரிடமிருந்து சுமார் ஒரு கிலோகிராம் எடையுடைய ஐஸ் போதைப்பொருளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
அத்துடன், சந்தேகநபர் போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் மோட்டார் வாகனம் ஒன்றும் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகுதியின் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபாவாகும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும், அளுத்கம பிரதேசத்தில் இருந்து தற்போது வெளிநாட்டில் இருந்தவாறு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வரும் அசாம் மொஹமட் என்பவரின் போதைப்பொருள் விநியோகத்தைக் கொழும்பு மாவட்டத்தை உள்ளடக்கும் வகையில் முன்னெடுத்து வந்தவர் என்றும் விசாரணை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரையும் சான்றுகளையும் கடுவலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்று மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.








.jpg)



