சீதுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டாரவளை பகுதியில் நேற்று புதன்கிழமை (21) பொலிஸ் உத்தியோகத்தர்கள் போன்று நடித்து வீதியில் செல்வோரைச் சோதனைக்குட்படுத்தி பணம் மற்றும் சொத்துகளைக் கொள்ளையடித்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு சீதுவை பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 27 வயதுடையவர்களாவர்.
மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, இவர்கள் சீதுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லியனகேமுல்ல, அமண்தொலுவ, தம்புதுரய மற்றும் உதம்மிட்ட ஆகிய பகுதிகளில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் போன்று நடித்து வீதிகளில் செல்பவர்களைச் சோதனையிட்டுப் பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடித்தமை தெரியவந்துள்ளது.
பணம் மற்றும் சொத்துக் கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எதிரிசூரிய பகுதியில் இடம்பெற்ற பணக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் என்பது விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இன்று வியாழக்கிழமை (22) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சீதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.