
சில நோய்களுக்கு மருந்துகள் உள்ளன. ஆனால் உரிய நேரத்தில் அந்த மருந்துகளை எடுத்துக்கொள்ளாமல் சபைக்கு வருவதால் பிரச்சினைகள் ஏற்படுகின்றன என சுகாதார பிரதி அமைச்சர் ஹங்சக விஜேமுனி பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை நோக்கி குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (23) நடைபெற்ற விசர்நாய்க் கடி நோயை ஒழித்தல் மற்றும் நாய்களை பதிவு செய்தல் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும்போது பிரதி அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
விவாதத்தில் பிரதி அமைச்சர் உரையாற்றிக்கொண்டிருந்த போது, பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, அடிக்கடி ஒழுங்குப் பிரச்சினைகளை எழுப்பி சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்துக் கொண்டிருந்தார்.இதன்போது அவர் முன்வைக்கும் விடயங்கள் ஒழுங்குப் பிரச்சினை அல்ல என்று சபைக்கு தலைமைதாங்கிய உறுப்பினர் தொடர்ச்சியாக குறிப்பிட்டுக் கொண்டிருந்தார்.
இவ்வேளையில் தொடர்ந்தும் உரையாற்றிய பிரதி அமைச்சர் ஹங்சக விஜேமுனி,எனக்கு உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்குங்கள். இவருக்கு தேவையான சிகிச்சைகள் இருந்தால் அவற்றை பாராளுமன்றத்துக்கு வரும் போதே சிகிச்சைப் பெற்றிருக்க வேண்டும். சில நோய்களுக்கு மருந்துகள் உள்ளன. அவற்றை பயன்படுத்தாமல் இங்கு வருவதே பிரச்சினையாக உள்ளது என்றார்.












