
இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம, விசாரணை நிறைவடையும் வரையில் விளக்கமறியலில் வைப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையின் அடிப்படையில், போகொல்லாம புதன்கிழமை (5) இலஞ்ச ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் மீது ஆணைக்குழுவால் தொடுக்கப்பட்ட வழக்கில், அவர் நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக ஆஜராகத் தவறியதன் காரணமாக, அவரைக் கைது செய்வதற்கு மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது. இதனைத் தொடர்ந்து, இலஞ்ச ஆணையக்குழுவினரால் அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.












