செம்மணி மனிதப்புதைகுழியில் புதைக்கப்பட்டுள்ள உடல்களின் உயர்வான எண்ணிக்கையை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், அவை தொற்றுநோயினாலோ அல்லது இயற்கை அனர்த்தத்தினாலோ உயிரிழந்தவர்களின் உடல்களாக இருக்கக்கூடுமோ எனும் கேள்வி எழுவதாகவும், அங்கு உயிரிழந்தோரின் தனிப்பட்ட உடைமைகளை சேர்த்துப் புதைப்பதை விடவும், அவர்களது உடல்களை விரைவாக அடக்கம் செய்வதே பிரதான கரிசனைக்குரிய விடயமாக இருந்திருக்கலாம் என்றும் யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவவின் இடைக்கால அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்தோடு செம்மணியில் ஆடைகள், துணிகள் பெருமளவில் அகழ்ந்தெடுக்கப்படாமையை, அங்கு உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட வேளையில் ஆடைகள் இருக்கவில்லை என்பதற்கான உறுதியான சான்றாகக் கருதுவதை விட, அதனை ஒரு புதைபடிவச் சிதைவுசார் அவதானிப்பாகவே கருதவேண்டும் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் கண்டறியப்பட்ட மிகப்பெரிய மனிதப்புதைகுழியான செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் தயாரிக்கப்பட்ட 'யாழ்ப்பாணம், செம்மணியில் மேற்கொள்ளப்பட்ட தடயவியல் தொல்பொருள் அகழ்வாராய்ச்சி (2025/2026): கண்டுபிடிப்புகள் தொடர்பான சுருக்கமான அறிக்கை' எனும் தலைப்பிலான இடைக்கால அறிக்கை கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அவ்வறிக்கையில் உள்வாங்கப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:
தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மனித உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட களங்களின் தன்மை மற்றும் இயல்பு குறித்து இறுதி முடிவுக்கு வருவதற்கு, ஏற்கனவே திரட்டப்பட்டுள்ள சான்றாதாரப் பொருட்கள் மாத்திரம் போதுமானவையாக இல்லை. எனினும் கண்டறியப்பட்ட பொருட்களையும் அவற்றுடன் தொடர்புடைய சூழலியல் சான்றுகளையும் அடிப்படையாகக்கொண்டு நோக்குமிடத்து, உலகின் பிற பகுதிகளில் கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்ட இரகசிய அடக்கக் களங்களை விடவும், முறையான நடைமுறைகளின் பிரகாரம் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட களங்களுடனேயே இந்த செம்மணி அதிக ஒற்றுமைகளைக் கொண்டிருக்கிறது.
இக்களத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ள தனிநபர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தமட்டில், ஒப்பீட்டளவில் உயர்வான அடர்த்தியைக்கொண்டு இறந்தவர்கள் எத்தகைய சூழ்நிலையில் அடக்கம் செய்யப்பட்டார்கள் என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. அடக்கம் செய்யப்பட்ட உடல்களின் இந்தச் செறிவு ஒரு தொற்றுநோயாலோ அல்லது இயற்கைப் பேரழிவினாலோ ஏற்பட்டிருந்தால், அதனுடன் தொடர்புடைய குறைந்தளவிலான பொருட்கள் மாத்திரமே கண்டெடுக்கப்படுவது எதிர்பார்க்கக்கூடியதொரு விடயமே. இவ்வாறான சூழ்நிலைகளில் கணிசமானளவு பொருட்கள் அல்லது உயிரிழந்தோரின் தனிப்பட்ட உடைமைகளை சேர்த்துப் புதைப்பதை விடவும், உயிரிழந்தோரின் உடல்களை விரைவாக அடக்கம் செய்வதே பிரதான கரிசனைக்குரிய விடயமாக இருந்திருக்கலாம். எனவே ஒப்பீட்டளவில் ஏனைய பொருட்களின் பற்றாக்குறை அல்லது குறைந்தளவிலான பன்முகத்தன்மை என்பவற்றை எந்தவொரு அடக்கச் சூழலுக்குமான தீர்க்கமான சான்றாகக் கருதக்கூடாது.
அதேவேளை இவ்வறிக்கையில் உள்வாங்கப்பட்டுள்ள விடயங்கள் அனைத்தும் தற்காலிகமானவையே. மாறாக இதுபற்றி விரிவாக விளக்கமளிப்பதற்கு தொல்லியல் சூழல், இணைத்தொடர்புகள், அடக்க அமைப்பு முறை, எலும்புக்கூடு சார்ந்த சான்றுகள் மற்றும் அச்சூழலுடன் தொடர்புடைய ஏனைய பொருட்கள், அவற்றைக்கொண்டு கணிப்பிடக்கூடிய காலப்பகுதி தொடர்பான தகவல்கள் என்பன அவசியமாகின்றன. எனவே உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட சூழ்நிலைகள், நோக்கம் அல்லது வரலாற்றுச்சூழல் என்பன தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்வதற்கு முன்பதாக, தற்போது கிடைக்கப்பெற்றுள்ள சான்றுகள் எச்சரிக்கையுடன் மதிப்பீடு செய்யப்படவேண்டும்.
மேலும் செம்மணி மனிதப்புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் ஆடைகள் நேரடியாகப் பிணைந்திருந்தமைக்கான சான்றுகள் எவையும் கிடைக்கப்பெறவில்லை.
இருப்பினும் துணிகள் சிதையாமல் எஞ்சியிருக்கவில்லை என்பதால் மாத்திரம், உயிரிழந்தவர்கள் ஆடைகள் இன்றியே புதைக்கப்பட்டனர் என்ற முடிவுக்கு வந்துவிடக்கூடாது. துணிகள் உள்ளிட்ட பொருட்கள் சாதகமற்ற சூழல்களில் உக்கிப்போகும் தன்மை கொண்டவையாகும். அதுமாத்திரமன்றி துணிகள் உள்ளிட்ட பொருட்கள் சிதைவடையாமல் பாதுகாக்கப்படுவதென்பது மண்ணின் பௌதிக இரசாயனப் பண்புகள், ஈரப்பதனின் அளவு, நுண்ணுயிரிகளின் செயற்பாடுகள் மற்றும் புதைக்கப்பட்டிருந்த கால அளவு என்பவற்றிலேயே பெரிதும் தங்கியிருக்கின்றது.
எனவே செம்மணியில் ஆடைகள், துணிகள் பெருமளவில் அகழ்ந்தெடுக்கப்படாமையை, அங்கு உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட வேளையில் ஆடைகள் இருக்கவில்லை என்பதற்கான உறுதியான சான்றாகக் கருதுவதை விட, அதனை ஒரு புதைபடிவச் சிதைவுசார் அவதானிப்பாகவே கருதவேண்டும்.
அதேபோன்று இங்கு கண்டறியப்பட்ட பொருட்களில் பல தாயத்துக்கள் மற்றும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான இலங்கை நாணயங்களும் அடங்குகின்றன.
இவை மனித எச்சங்களுடன் இணைந்து காணப்படுவதானது, உயிரிழந்தவருடன் தொடர்புடைய சடங்கு நடைமுறைகளின் ஓரங்கமாக இவை இருந்திருக்கக்கூடுமோ என்ற கேள்வியை எழுப்புகின்றது. எனினும் தொல்லியல் சூழலின் அடிப்படையில் மாத்திரம் அவற்றின் வகிபாகத்தைத் துல்லியமாக உறுதிப்படுத்திவிடமுடியாது என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.