
கிரிஷ் நிறுவனத்தின் சர்ச்சைக்குரிய ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷ கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (13) ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணையத்தால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இவழக்கு, கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
குறித்த வழக்கிற்காக நாமல் ராஜபக்ஷ சிறைச்சாலை அதிகாரிகளால் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.












