பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் ஹரிணி அமரசூரிய வெளிநாடு பயணம்!



2026ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் (CHOGM) பங்கேற்பதற்காக, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (31) சனிக்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார்.

அன்டிகுவா மற்றும் பர்புடாவின் செயிண்ட் ஜோன்ஸ் நகரில் நடைபெறவுள்ள இம்மாநாடு இன்று முதல் நவம்பர் 6ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இந்த விஜயத்தின்போது, பிரதமர் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதுடன், உறுப்பு நாடுகளுக்கு இடையிலான பொதுநலன் சார்ந்த முக்கிய விடயங்கள் குறித்த கலந்துரையாடல்களிலும் பங்கேற்கவுள்ளார்.