நுவரெலியாவில் பாடசாலைகள், முன்பள்ளிகள் மூடல் – மழையின் தீவிரம் சற்றுத் தணிந்தது!



செ. திவாகரன்

மோசமான வானிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளுக்கு விடுமுறை மூடப்பட்டன - மழை சற்று தணிந்தது.

நுவரெலியா மாவட்டத்தில் (26) நிலவிய கடுமையான மோசமான வானிலையைத் தொடர்ந்து, கல்வி அமைச்சு நாடு முழுவதும் உள்ள பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளுக்கு இன்று (27) விடுமுறை அளிக்க நடவடிக்கை எடுத்ததுடன்,

அதன் படி தோட்டப் பகுதியில் உள்ள அனைத்துப் பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளும் இன்று மூடப்பட்டன.

(26) அன்று நிலவிய கடுமையான மோசமான வானிலையைத் தொடர்ந்து, நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளின் கல்வி பணிப்பாளர் மற்றும் அதிபரின் ஒப்புதலுக்கு உட்பட்டு உரிய நேரத்தில் அவர்களது பெற்றோர்களை அழைத்து ஒப்படைத்தன மேலும், (26) உடன் ஒப்பிடும்போது (27) அன்று காலை மழை சற்று தணிந்து காணப்படுகின்றது.