ஜனாதிபதி அநுரவுக்கு ஆதரவாக தங்காலையில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற மாபெரும் பேரணி!



பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, 'ஜனவரம புரவசியோ' (மக்கள் ஆணைக்கான பிரஜைகள்) அமைப்பின் ஏற்பாட்டில் பௌத்த தேரர்கள் தலைமையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்ற நான்காவது பாரிய அமைதிப் பேரணி இன்று (22) தங்காலையில் நடைபெற்றது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துக்கு மக்கள் வழங்கிய ஆணையைப் பாதுகாக்க வேண்டும் என்றும், திருடர்கள், ஊழல்வாதிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இந்த பேரணியினர் ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்தனர்

.