![]() |
நாட்டில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கடும் மழையினால் பல பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிவேகமாக அதிகரித்து வருவதால், அவற்றின் வான் கதவுகள் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 08 வான் கதவுகள் தலா 02 அடி வீதம் திறக்கப்பட்டு, விநாடிக்கு 10,400 கன அடி (cusecs) நீர் தெதுரு ஓயாவிற்கு வெளியேற்றப்பட்டுகிறது.
இராஜங்கனை நீர்த்தேக்கத்தின் 06 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன (02 கதவுகள் தலா 04 அடிகள், 0 கதவுகள் தலா 03 அடிகள் மற்றும் 02 கதவுகள் தலா 02 அடிகள் வீதம்).
ஆரம்பத்தில் கலா ஓயாவிற்கு விநாடிக்கு 3,800 கன அடி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில், இன்று (26) திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் அது விநாடிக்கு 8,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் 1 வான் கதவு திறக்கப்பட்டு விநாடிக்கு 45 கன மீற்றர் நீரும், மின் உற்பத்தியின் போது 48 கன மீற்றர் நீரும் என மொத்தம் விநாடிக்கு 93 கன மீற்றர் (cu.m/s) நீர் குடா கங்கைக்கு வெளியேற்றப்படுகிறது.
கலாவாவி நீர்த்தேக்கத்தின் 02 அவசர வான் கதவுகள் தலா 06 அங்குலங்கள் வீதம் திறக்கப்பட்டு விநாடிக்கு 511 கன அடி நீர் கலா ஓயாவிற்கு வெளியேற்றப்படுகிறது.
தம்புள்ள ஓயா வழியாக விநாடிக்கு 5,500 கன அடி நீர் நீர்த்தேக்கத்திற்குள் வருகின்ற நிலையில், இதன் நீர் சேமிப்பு 83,782 ஏக்கர்-அடியாக அதிகரித்துள்ளது.
தப்பாவ நீர்த்தேக்கத்தின் மீ ஓயா ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள இந்த நீர்த்தேக்கத்தின் 02 வான் கதவுகள் தலா அரை அடி வீதம் திறக்கப்பட்டு நீர் மட்டம் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.
நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழை அளவு மற்றும் நீர்த்தேக்கங்களுக்கு வரும் நீரின் அளவைப் பொறுத்து வான் கதவுகள் திறக்கப்படும் வீதம் மேலும் மாற்றமடையக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தெதுரு ஓயா, கலா ஓயா மற்றும் குடா கங்கை போன்ற ஆற்றுப் படுகைகளை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் வாழும் பொதுமக்கள் ஆற்றின் நீர்மட்ட மாற்றங்கள் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளின் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.









.jpg)



