இலங்கை பெட்மிண்டன் சம்மேளனம் மற்றும் இலங்கை சைக்கிளோட்ட சம்மேளனம் ஆகிய விளையாட்டு சங்கங்களின் பதிவுகளைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே நடவடிக்கை எடுத்துள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக, அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிட்டு அமைச்சர் இத்தீர்மானத்தை எடுத்துள்ளளார்.,
குறித்த இரு அமைப்புகளினதும் நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக 5 உறுப்பினர்களைக் கொண்ட இரு இடைக்காலக் குழுக்களையும் அவர் நியமித்துள்ளார்.
இதற்கமைய, இலங்கை பெட்மிண்டன் சம்மேளனத்துக்கான இடைக்காலக் குழுவின் தலைவராக எம்.எச்.எஸ்.எஸ். குசும் குமார நியமிக்கப்பட்டுள்ளதுடன், நிலூக கருணாரத்ன, மிலிந்த சூரியஆரச்சி, சுவதேஷ் ரந்திக டி சில்வா மற்றும் சமன் ஸ்ரீ லால் ஆகியோர் அதன் ஏனைய உறுப்பினர்களாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படும் வரை பெட்மிண்டன் சம்மேளத்தின் அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் இந்த இடைக்காலக் குழுவின் கீழேயே முன்னெடுக்கப்படும்.
அதேபோன்று, இலங்கை சைக்கிளோட்ட சம்மேளனத்திற்கான இடைக்காலக் குழுவின் தலைவராக அனுர மஹாஆரச்சிகே நியமிக்கப்பட்டுள்ளதுடன், ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் வந்தன ரத்நாயக்க, ஆர். சந்திரசேகர, உபாலி ரத்நாயக்க மற்றும் குசலானி விக்ரமரத்ன ஆகியோர் அதன் ஏனைய உறுப்பினர்களாகச் செயற்படவுள்ளனர்.
குறித்த இரு விளையாட்டு அமைப்புகளிலும் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மோசடிகள், ஊழல்கள் மற்றும் ஏனைய முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணைகளை மேற்கொள்வது இந்த இடைக்காலக் குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பிரதான பொறுப்பாகும்.
அத்துடன், விளையாட்டுச் சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு அமைய புதிய யாப்புகளை அங்கீகரித்தல், தகுதியான உறுப்பினர்களைப் பதிவு செய்தல் மற்றும் விசேட பொதுக்கூட்டங்கள், வருடாந்த பொதுக்கூட்டங்களை நடத்துவது உள்ளிட்ட நிர்வாகப் பணிகளை மேற்பார்வையிடுவதும் இந்தக் குழுக்களால் முன்னெடுக்கப்படவுள்ளது.
விளையாட்டுச் சட்ட விதிகளின்படி புதிய யாப்பு பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 90 நாட்களுக்குள் இரு சம்மேளனங்களுக்குமான புதிய நிர்வாகிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தல்களை இந்த இடைக்காலக் குழுக்கள் நடத்தி முடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

.jpg)