ஐக்கிய மக்ள் சக்தி கட்சி காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (11) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
நீதிமன்ற தண்டைக்குள்ளாகி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஞானசார தேரரின் காவி உடையை அகற்றுவதற்கு எடுத்த தீர்மானம் மிகவும் வேதனைக்குரிய செயலாகும். இந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கு முன்னர் இதுதொடர்பில் மகாநாயக்க தேரர்களின் ஆலாேசனைகளை பெற்றிக்கலாம். ஆனால் இந்த அரசாங்கம் அவ்வாறு எதனையும் மேற்கொள்ளாமல் எடுத்திருக்கும் இந்த நடவடிக்கை பெரும்பான்மை பெளத்த மக்களின் உள்ளத்தை வேதனைப்படுத்தும் செயலாகும்.
ஞானசார தேரர் இதற்கு முன்னர் நீதிமன்ற தண்டனைக்கு அமைய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அந்த காலப்பகுதியில் அவரின் காவி உடை கலையப்படவில்லை. தற்போது அவர், ஜனாதிபதி பொது மன்னிப்பில் விடுதலையான நிலையில், குறித்த பொது மன்னிப்பு சரியான விதிகளை பின்பற்றி மேற்கொள்ளளப்படவில்லை என, உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து அவர், மீண்டும் சிறைப்படுத்தப்பட்டுள்ளார். ஆனால் இந்தமுறை சிறைக்கு சென்ற பின்னர் அவரின் காவி உடை நீக்கப்பட்டிருக்கிறது. இது எவ்வாறு சாத்தியமாகும்.
அதேநேரம் இந்த ஆட்சியாளர்கள் இனம், மதம் தொடர்பில் உணர்வற்றவர்கள். இதனை நாங்கள் ஆரம்பத்தில் இருந்து தெரிவித்து வந்தோம். என்றாலும் மக்களுக்கு இப்போதுதான் இவர்களின் உண்மையான சுயரூபம் தெரியவந்திருக்கிறது. இந்த ஆட்சியாளர்களின் செயற்பாடுகளால் மக்கள் தற்போது விரக்தியடைந்துள்ளனர். அரசியலமைப்பின் 22ஆம் திருத்தம் தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் அவர்களின் நிலைப்பாட்டை தெரிவித்து, ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தையும் இவர்கள் வெளிப்படுத்தாமல் மறைத்து வந்தார்கள். இதுதொடர்பில் மகாநாயக்க தேரர்களின் வழிகாட்டல்கள் மற்றும் ஆலாேசனைகளைக்கூட இவர்கள் கண்டுகொள்ளவில்லை.
இவர்கள் ஆட்சிக்கு வரும்போது இனவாதத்துக்கு இடமளிப்பதில்லை என்றே தெரிிவித்து வந்தார்கள். ஆனால் தற்போது ஞானசார தேரரின் காவி உடையை நீக்கியது இனவாதத்தை தூண்டும் செயலாகும். கடந்த கால ஆட்சியாளர்கள் சிறுபான்மை மக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தி, அவர்களை இனவாதத்தின்பால் தூண்டினார்கள். இந்த அரசாங்கம் பெளத்த தேரரின் காவி உடையை அகற்றி, சிங்கள பெளத்த மக்களை இனவாதத்தின்பால் தூண்டியுள்ளது.
அதனால் தற்போது அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை கண்டித்தும் ஞானசார தேரருக்கு மீண்டும் காவி உடையை அணிவிக்குமாறு தெரிவித்து தேரர்கள் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்கள். அதனால் அரசாங்கம் உடடியாக இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் இல்லாவிட்டால், இந்த பாத யாத்துரை அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டமாக மாறும் அபாயம் இருக்கிறது என்றார்.


.jpg)










