பொலன்னறுவை மாவட்டத்தில் கல்வி தொடர்பான கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, புதிய கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் மத நல்லிணக்கம் தொடர்பில் மகா சங்கத்தினருடன் கலந்துரையாடியுள்ளார்.
இதற்கமைய, கடந்த 24ஆம் திகதி வரலாற்றுச் சிறப்புமிக்க இசிபதன விகாரைக்குச் சென்ற பிரதமர், சங்கைக்குரிய உடகம ஸ்ரீ தம்மானந்த தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரைச் சந்தித்துக் கலந்துரையாடியதுடன், கதுருவெல ஜயந்தி விகாரையின் விகாராதிபதியான சங்கைக்குரிய கதுருவெல தம்மபால தேரரையும் சந்தித்து அவரது நலன் குறித்துக் கேட்டறிந்துள்ளார். இந்நிகழ்வில், பொலன்னறுவை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் பிரதி அமைச்சருமான டி.பி. சரத் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.
குறித்த சந்திப்பு தொடர்பில் பிரதமர் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பொலன்னறுவை மாவட்டத்தில் கல்வி தொடர்பான கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஒக்டோபர் 24ஆம் திகதி வரலாற்றுச் சிறப்புமிக்க இசிபதன விகாரைக்குச் சென்றார்.
இதன்போது, சங்கைக்குரிய உடகம ஸ்ரீ தம்மானந்த தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரைச் சந்தித்த பிரதமர், புதிய கல்விச் சீர்திருத்தச் செயற்பாடுகள் மற்றும் மத நல்லிணக்கம் தொடர்பில் அவ்விகாரையின் விகாராதிபதியுடன் கலந்துரையாடினார்.
நாட்டின் கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் புதிய சீர்திருத்தச் செயற்பாடுகள் தொடர்பிலும், மத நல்லிணக்கத்தைப் பேணுவதன் முக்கியத்துவம் தொடர்பிலும் இந்தச் சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கதுருவெல ஜயந்தி விகாரைக்குச் சென்ற பிரதமர் ஹரிணி அமரசூரிய, அவ்விகாரையின் விகாராதிபதியான சங்கைக்குரிய கதுருவெல தம்மபால தேரரைச் சந்தித்தார். இதன்போது, தேரரின் நலன் குறித்து விசாரித்தறிந்த பிரதமர், அவருடன் கலந்துரையாடினார்.
பொலன்னறுவை மாவட்டத்தில் கல்வி தொடர்பான கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டிருந்த பிரதமர், மதத் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியமை இந்த விஜயத்தின் முக்கிய அம்சமாக அமைந்தது என அவ் அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

.jpg)