கல்விக்கு முன்னுரிமை கொடுப்பதே எமது அரசாங்கத்தின் நோக்கம்- பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு

எமது மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை சிறப்பாக முன்னெடுப்பதற்காகவே பிரதமர் அவர்களால் கல்வி மறுசீரமைப்பு பணிகள் நேர்த்தியாகவும் துரிதமாகவும் முன்னெடுக் கப்பட்டு வருகின்றது இதன் மூலம் இளைஞர்கள் எதிர்காலத்தில் நாட்டை எவ்வாறு முன்னேற்றுவது என்பது தொடர்பான விடையங்கள் அடங்கியுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு இன்று மட்டு கல்வி வளையத்திற்குட்பட்ட இந்து கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

இப்பாடசாலையின் அபிவிருத்தி சங்கத்தினர் விடுத்த வேண்டுகோளின் பேரில் பாராளுமன்ற உறுப்பினரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து இப்பாடசாலையில் நீண்ட நாள் தேவையாக இருந்து வந்த பாடசாலை பேண்ட் வாத்திய குழுவினருக்கான மூன்று லட்சம் ரூபாய் பெறுமதியான இசைக்கருவிகள் மற்றும் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு

 பாடசாலையின் அதிபர் கே பகிரதன் தலைமையில் நேற்று நண்பகல் 26.10 2026 இடம் பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

இன்றைய இந்த நிகழ்விற்கு கல்வி திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் மட்டு மாநகர சபை உறுப்பினர்கள் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.