SLS தரச்சான்றிதழ் இல்லாத 758க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்கள் பறிமுதல் – நாடளாவிய ரீதியில் அதிரடி சோதனை!



இலங்கையில் SLS தரச்சான்றிதழ் அடையாளம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்ட 758க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள் பாதுகாப்புத் தலைக்கவசங்கள், நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளின்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

ஒக்டோபர் 6ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் கீழ், நாட்டின் 21 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட 84 வெற்றிகரமான சுற்றிவளைப்புகளின்போது குறைந்தது 327 தலைக்கவசங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

SLS 517 தரநிலைக்கு அமைய, மோட்டார் சைக்கிள் பாதுகாப்புத் தலைக்கவசங்களில் கட்டாயமாக இடம்பெற வேண்டிய SLS தரச்சான்றிதழ் அடையாளம் இல்லாத பொருட்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.