திருக்கோவிலில் பாழடைந்த கிணற்றிலிருந்து T-56 மற்றும் LMG ஆயுதப் பாகங்கள் மீட்பு




[பாறுக் ஷிஹான்]


அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரங்குடா பகுதியில் அமைந்துள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து T-56 ரகத் துப்பாக்கிகளின் தோட்டாக்கூடுகள் மற்றும் இலகுரக இயந்திரத் துப்பாக்கியின் (LMG) பாகங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

பழைய விசேட அதிரடிப்படை உணவகத்திற்கு முன்பாக உள்ள குறித்த கிணற்றில் ஆயுதப் பாகங்கள் இருப்பதாகக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாகத் திருக்கோவில் பொலிஸார் சோதனை மேற்கொண்டனர்.

இதன்போது 9 T-56 தோட்டாக்கூடுகள், போல்ட்கள் உள்ளிட்ட 3 T-56 துப்பாக்கிப் பாகங்கள் மற்றும் 6 LMG ஆயுதப் பாகங்கள் அல்லது தோட்டாக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லலிந்த பீரிஸ் தலைமையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.