
அம்பலாங்கொடை, கந்தேகொட மயானத்திலுள்ள கல்லறை ஒன்றுக்கு அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 16.8 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 'ஐஸ்' போதைப்பொருள் தொகை மீட்கப்பட்டுள்ளது.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, மாத்தறை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளினால் இன்று செவ்வாய்க்கிழமை (17) இந்தச் சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, மயான வளாகத்திலுள்ள கல்லறை ஒன்றுக்கு அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1 கிலோகிராம் 400 கிராம் 'ஐஸ்' போதைப்பொருள் அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்காக இவை அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.








.jpg)



