
அநுராதபுரம் – ஹொரவப்பொத்தானை பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பெண் ஒருவர் உட்பட மூவர் பொலிஸாரால் நேற்று (15) ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் இஹல கும்புக்கொல்லேவ பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், பெண் சந்தேகநபர் 17 வயதுடையவர் எனவும், ஏனைய இரு ஆண் சந்தேகநபர்களும் 23 மற்றும் 26 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி, ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இஹல கும்புக்கொல்லேவ பகுதியில் வசித்து வந்த நபரொருவர், கைவிடப்பட்ட விவசாயக் கிணறு ஒன்றினுள் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் ஹொரவப்பொத்தானை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில், குறித்த சம்பவம் கொலை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து, குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் நேற்றைய தினம் இஹல கும்புக்கொல்லேவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதுடன், இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஹொரவப்பொத்தானை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.









.jpg)


