கிரிஷ் நிதிப் பரிவர்த்தனை வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் ஜானகி சிறிவர்தன ஆகியோரை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த வழக்கு விசாரணையின் போது பிணை வழங்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இன்று (06) வெள்ளிக்கிழமை நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அத்துடன், இவ்வழக்கு விசாரணைக்கு அமைவாகக் கைது செய்யப்பட்ட கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளரான ஜானகி சிறிவர்தன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறும் கொழும்பு நீதவான் அசங்க எஸ். போதரகம உத்தரவு பிறப்பித்துள்ளார்.













